சினிமா

பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந் தற்கொலை!

பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந் சிங் ராஜ்புட் இன்று தனது வீட்டில தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சுஷாந்தின் வீட்டில் வேலை செய்யும் நபர் ஒருவர், பாந்த்ரா காவல் நிலையத்தில் சுஷாந்தின் தற்கொலை குறித்து தகவல் தெரிவித்துள்ளதாக மது பால் எனும் பத்திரிகையாளர் தகவல் அளித்துள்ளார்.

நடிகர் சுஷாந் சிங் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தான் முதலில் ரசிகர்கள் மத்தியில் வளம்வந்தார். சமீப காலமாகத்தான் அவர் திரைப்படங்களில் ஜொலிக்கத் தொடங்கினார். அதிலும் கடந்த 2016ம் ஆண்டு தோனி; The untold story என்ற படம் இந்திய சினிமாவில் பெருமளவில் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க