இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் சூழல் மாசடைவது தொடர்பாக அக்கறை செலுத்துவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், அங்கு இடம்பெற்ற செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அனைத்து புள்ளிவிவரங்களையும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் சுத்தமான காலநிலையில் உள்ளது.ஏனெனில் சிறந்த நீர் வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு சூழல் மாசு மற்றும் தூய்மை குறித்த உணர்வு இல்லை.
பல நாடுகளில் நல்ல காற்று இல்லை, சுத்தமான நீர் இல்லை மற்றும் சில நகரங்களுக்குச் சென்றால் சுவாசிக்க முடியாது. அவர்களின் பொறுப்பை அவர்கள் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க