சினிமா

கண்ணாடி உடையில் கலக்கும் ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு தற்போது சினிமாவில் படங்கள் இல்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வந்தவர். தேவர் மகன் படத்தின் மூலம் பாடகியாக வந்தவர், ஹேராம், வாரணம் ஆயிரம், 7 ம் அறிவு, மான் கராத்தே, புலி, வேதாளம் படங்ளில் பாடியுள்ளார்.

கடந்த 2015 ல் விஜய்யுடன் நடித்த புலி, அஜித்துடன் நடித்த வேதாளம் படம் தான் கடைசியாக அவர் நடித்த படம்.

தற்போது வெளிநாட்டில் இசை நிகழ்ச்சிகளை மட்டுமே செய்து வருகிறார். இந்நிலையில் கண்ணாடி உடையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

கருத்து தெரிவிக்க