மனித உரிமை செயற்பாடுகள் குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு – பொதுநலவாய செயலக மனித உரிமைகள் தொடர்பில் பிரித்தானியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இலங்கை அரசாங்கம் குறித்த தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
ஊடக சுதந்திரம், ஆண்-பெண் சமத்துவம், சட்ட திருத்தங்களை மேம்படுத்துதல் தொடர்பில் அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளில் முன்னேற்றம் போதாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை அரசாங்கத்தால் ஐக்கிய நாடுகள் சபையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த விடயங்களிலும் அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க