அழகு / ஆரோக்கியம்

கருஞ்சீரகம் தரும் அளவற்ற நன்மைகள்!

பலவித நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்ட  அற்புத  மருந்து கருஞ்சீரகம். இதன் மருத்துவ பயன்கள் சிலவற்றை பார்ப்போம்.

  • கருஞ்சீரகத்தை தூளாக்கி அதில் 4 கிராம் எடுத்து தேனில் கலந்து 3 இல் இருந்து 7 நாட்கள் வரைக்கும் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால், விசப் பூச்சிக் கடியாக இருந்தாலும் , வேறு எந்த நச்சுக் கடியாக இருந்தாலும் குணமாகும்.
  • தலைவலிக்கும்  மூட்டு வீக்கத்திற்கும் கருஞ்சீரகத்தை வெந்நீர் விட்டு அரைத்து பற்றுப் போல் பூசி வந்தால் குணமாகும்.
  • கரப்பான் , தோல் சிரங்கு , படை போன்ற பிரச்சனைகளுக்கு  கருஞ்சீரகத் தூளை  நல்லெண்ணெயில் கலந்து குழைத்து பூசினால் குணமடையும்.
  • விடாமல் வரும் விக்கல் பிரச்சனைகளுக்கு கருஞ்சீரகத் தூளில் ஒரு கிராம் எடுத்து மோரில் கலந்து குடித்தால் உடன் குணமாகும்.
  • உடலில் ஏற்படும் தேமலை பூரணமாய் இல்லாதொழிக்க கருஞ்சீரகத்தை நீர் விட்டு அரைத்து , தேமலின் மேல் பூசி வர நிவாரணம் கிடைக்கும்.
  • ஒரு கைப்பிடி அளவு கீழ்க்காய் நெல்லி இலைகளுடன்  ஒரு தேக்கரண்டியளவு  கருஞ்சீரகம் சேர்த்து சிறிதளவு பசும்பால் விட்டு அரைத்து எடுத்து , ஒரு கப் பாலில் கலந்து காலையும் மாலையும்  உணவு உண்ட பின் , 30 நிமிடங்கள் கழித்து பருகி வர மஞ்சள் காமாலை  குணமாகும்.

கருத்து தெரிவிக்க