கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.
ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர்களிடம் இன்று 6ஆம் திகதி வியாழக்கிழமை வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.
முன்னதாக அரச புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா ஆகியோர் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.
பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமை ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு இந்த வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றது.
கருத்து தெரிவிக்க