கூகுள் தலைமைச்செயலதிகாரி சுந்தர் பிச்சைக்கு 2019-ஆம் ஆண்டுக்கான குளோபல் லீடர்ஷிப் விருது அறிவிக்கபட்டுள்ளது.
வர்த்தக ரீதியாக சிறப்பாக பங்காற்றும் அமெரிக்க மற்றும் இந்திய பெரு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு வாஷிங்டனைச் சேர்ந்த யுஎஸ்ஐபிசி எனப்படும் அமெரிக்க – இந்திய வர்த்தக சபை கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் குளோபல் லீடர் ஷிப் விருதுகளை வழங்கி வருகிறது.
கூகுள் தலைமைச் செயலதிகாரியும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை, அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கின் தலைவர் அடேனா ஃப்ரீட்மேன் ஆகியோருக்கு, 2019-ஆம் ஆண்டுக்கான குளோபல் லீடர்ஷிப் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க