பருவநிலை மாற்றத்தால் உலகின் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு 1000 பில்லியன் அமெரிக்க டொலர் வரையில் செலவினங்கள் கூடுமென பிரித்தானிய நிறுவனமான சிடிபி குறிப்பிட்டுள்ளது.
உலகின் 215 முன்னணி வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில் சிடிபி இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
வெப்ப அதிகரிப்பு, கணிக்க முடியாத தட்ப-வெப்பம், வெப்ப வாயு வெளியேற்றத்துக்காக விதிக்கப்படும் வரி ஆகிய அம்சங்களின் அடிப்படையில் செலவின அதிகரிப்பு கணிக்கப்பட்டுள்ளது.
உலக வெப்ப உயர்வு குறித்து, வர்த்தக நிறுவனங்கள் அண்மைக் காலமாக கவனம் செலுத்தி வருகின்றன.
கணினி, கைத்தொலைப்பேசி, மின்சாரத்தில் இயங்கும் பொருட்கள் என்பவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வெப்பநிலை அதிகரிப்பில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க