தேசிய தௌஹீத் ஜமாத்தே அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாசிம், 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் தொடர்ந்தும் தம்மால் கண்காணிப்பட்டு வந்தார் என்று பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் தற்போது தடுத்துவைத்து விசாரணை செய்யப்படுபவருமான சிரேஸ்;;ட காவல்துறை அதிபர் நாலக டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணையின்போது அவர் நேற்று இதனை தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு முதலே ஸஹ்ரானை பற்றி காவல்துறை அதிபருக்கு தகவல்கள் பரிமாறப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸஹ்ரானை பொறுத்தவரையில் ஐஎஸ் தொடர்பில் அவர் பேஸ்புக்கின் மூலம் பிரசாரங்களை செய்து வந்தார்.
இது இளைய முஸ்லிம் சமூகத்தினரியே தாக்கத்தை ஏற்படுத்தியது.
எனவே அவர் கைதுசெய்யப்படவேண்டும் என்று பயங்கரவாத தடுப்பு பிரிவு எண்ணியது என்றும் அவர் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க