சினிமா

இளையராஜாவின் எதிர்ப்புக்கு சீனு, கஸ்தூரி பதில்

விஜய் சேதுபதியின் 96 படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல்களுக்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்திருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“இப்போதைய படங்களில் எனது பாடல்களை பயன்படுத்துவது தவறு. இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனத்தை காட்டுகிறது” என இளையராஜா தெரிவித்திருந்தார்.

இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன. இந்த நிலையில் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, உள்ளிட்ட படங்களை இயக்கி சீனுராமசாமி, இளையராஜாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார்.

”96 படத்தை அவர் பார்த்திருந்தால் வாழ்த்தியிருப்பார்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதேவேளை “இளையராஜா இசையால் மட்டும் உரையாட வேண்டும். எண்ணத்தில் இருந்த என் மனதை இசையால் மாற்றி, மறுவாழ்வு தந்த இசைக்கடவுள் இளையராஜா, கடவுளை கேள்வி கேட்க வேண்டாமே” என்று நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க