உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இராஜினாமா அரசியல் நாடகம் – விமல்

முஸ்லிம் அரசியல்வாதிகளின் கூட்டு இராஜினாமா என்பது அரசியல் நாடகமாகும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பட்ட அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே விமல் மேற்கண்டவாறு கூறினார்.

“ முஸ்லிம் அரசியல்வாதிகள் இராஜினாமா செய்யவில்லை. அவர்களுக்கு தற்காலிக விடுமுறையே வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பதவிகள் வழங்கப்படலாம். எனவே, ஊடகப்பிரசாரத்துக்காக அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகமே இது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இருக்கையில் கூட்டாக விலகுவதானது, குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு ஒப்பான செயலாகும். எனவே, பாதுகாப்பு தரப்பின் ஊடாகவே விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

குறிப்பாக அமைச்சர் ரிஸாட் பதியுதின் வங்கிக் கணக்குள், அவருக்கு எங்கிருந்து பணம் வருகின்றது, யார், யாருடன் தொடர்புகளை பேணுகின்றார் என்பது உட்பட அனைத்து தகவல்களையும் கண்டறியவேண்டும்.” என்றும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க