உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரிஷாட்டுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை – அநுர வலியுறுத்து

ரிஷாட்டுக்கு எதிராக உடனடியாக  சி.ஐ.டி. விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார  திஸாநாயக்க தெரிவித்தார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பட்ட அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து  வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தால், எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதாக கருதமுடியாது.

எனவே, ரிஷாட்டுக்கு  எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் உடன் விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும்.

ரிஷாட் குற்றமிழைத்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை பொலிஸாரிடம் ஒப்படைக்கவேண்டும். மாறாக அறிவிப்புகளை மட்டும் விடுத்துக்கொண்டிருந்தால் எதுவும் நடக்காது.

அதேவேளை,  அரசியலில் வங்குரோந்து நிலைமை அடைந்தவர்களின் இறுதி ஆயுதமே இனவாதம் மற்றும் மதவாதமாகும்.

இன்று இவற்றை சிலர் கையிலெடுத்துள்ளனர். அதனால்தான் நாட்டில் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன.

குருணாகலை வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விஞ்ஞானப்பூர்வமான  விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். அப்போதுதான் உண்மை தெரியவரும்.

அதைவிடுத்து ஊகத்தின் அடிப்படையில் கருத்துகளை முன்வைத்தால் அவை வீண் பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும்.”  என்றும் அநுர  குமார  திஸாநாயக்க குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க