புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க-சீனா வர்த்தக பேச்சுவார்த்தை-சமாதான அறிக்கை வெளியிட்டது சீனா

அமெரிக்க-சீனா வர்த்தக பேச்சுவார்த்தை தோல்விகண்டு வரும் நிலையில் சீனா  வர்த்தகப்போரை விரும்பவில்லை என  தெரிவித்து வெள்ளை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பொருட்களுக்கு  சீனாவும் சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்காவும் போட்டி நோக்கில் இறக்குமதி வரியை அதிகரித்து வருவதன் காரணமாக எழுந்துள்ள வர்த்தக போரை நிறுத்த இருநாடுகளும்  பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.

எனும் அவை தொடர்ந்தும் உடன்பாடின்றி தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில்  வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் சீனா சமாதான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கு அமெரிக்காவே காரணம் என தெரிவித்துள்ள சீனா மேலும் பல விடயங்களை சுட்டிகாட்டியுள்ளது.

“சீனா வர்த்தகப்போரில் ஈடுபடவிரும்பவில்லை. அதே சமயம் வர்த்தகப்போருக்கு சீனா பயப்படாது. வர்த்தகப்போர் நிச்சயமாக தேவைப்படும் பட்சத்தில் சீனா தனது அணுகுமுறையை மாற்றி கொள்ளாது. எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் சீனா ஒருபோதும் தனது முக்கிய கொள்கைகளை விட்டுக்கொடுக்காது.

அமெரிக்காவின் உயர்மட்ட கோரிக்கைகள் சீனாவின் இறையாண்மையில் தலையீடுவதாக உள்ளது.

ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம், சீனா மீது அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம், வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கும், இருநாட்டின் தற்போதைய உறவு நிலைக்கும் யார் காரணம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

தீவிர அழுத்தத்தை கொடுப்பதன் மூலமும் அனைத்து வழிகளில் வர்த்தக பிரச்சினையை ஏற்படுத்துவதன் மூலமும் சீனாவை சரணடைய வைத்து விடலாம் என அமெரிக்கா கருதினால், அது ஒருபோதும் சாத்தியமற்றது”என சீனா குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க