தாம், பதவிவிலகிவிட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று கிழக்கு மாகாண ஆளுநர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
“ஊடகன்” இணையத்தளத்துக்கு இன்று அதிகாலை இந்த தகவலை அவர் வழங்கினார்.
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பின்னர், தீவிரவாதிகளுடன் தொடர்புகள் இருப்பதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் தாம் பதவிவிலகல் தொடர்பான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
எனினும் அதில் உண்மையில்லை.
இதுவரை பதவிவிலகல் கடிதம் எதனையும் தாம் ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை.
இது தொடர்பாக ஜனாதிபதியை தாம் நேற்று இரவு சந்தித்தாக குறிப்பிட்ட ஹிஸ்புல்லாஹ் “தாம் உங்களை பதவி விலகுமாறு கூறவும் மாட்டேன். பதவிவிலக்கவும் மாட்டேன். அது உங்களின் முடிவைப்பொறுத்தது” என்று தெரிவித்ததாக ஹிஸ்புல்லாஹ் ஊடகனிடம் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் இன்று காலை முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் பொதுஅமைப்புக்கள் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க