விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட் போட்டி: தென்னாபிரிக்காவை வென்றது பங்களாதேஷ்

உலக கிண்ணக் கிரிக்கெட்டில் பங்களாதேஸ_க்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தது.

12-வது உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன.

இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் லண்டன் ஓவலில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-பங்களாதேஸ் அணிகள் மோதின.

இந்தநிலையில் பங்களாதேஸ் அணி தமது 50 ஓவர்களின் முடிவில் 330 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்த 309 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

கருத்து தெரிவிக்க