அழகு / ஆரோக்கியம்

நிரந்தர அழகை பெறுவது எப்படி?

தோற்றத்துக்கு அளிக்கும் முக்கியத்துவம் நாளுக்குநாள்  அதிகரித்து வரும் நிலையில் தமது தோற்றத்தை அழகாக மாற்றுவதற்கு பலரும் முயற்சித்து வருகிறார்கள்.குறிப்பாக பெண்கள் இவ்விடயத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்கிறார்கள்.அதிக நேரத்தையும் செலவிடுகிறார்கள்.

ஆனாலும் பலருக்கு அதற்கான பலன்கள் வந்து சேர்வதில்லை.

முகத்துக்கு கடலை  மா, பயத்தம் மா சருமத்தை வெளிச்சமாகும் க்ரீம் வகைகள், பொடி லோஷன் என பலவித பொருட்களையும் பயன்படுத்துவார்கள். சிலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வார்கள்

எனினும் சருமம் தற்காலிகமாக பொலிவாகி சிறிது நாட்களில் அவலட்சணமாக தோற்றமளிக்கும்.சரி இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தான் என்ன என்று கேட்டினார்களானால், அதற்கு எமது ஆரோக்கியத்தை பேணுவதே ஒரே தீர்வாகும்.

சருமம் ஒவ்வொருநாளும் புதுப்பிக்கப்படுகிறது.

எனவே சருமத்தை பராமரிக்க  நாம் ஆரோக்கியமான உணவு முறையினையும் போதுமானளவு நீரையும் உட்கொள்ள முதலில் தீர்மானம் எடுக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு எனும் போது பழ வகைகள்,காய்கறிகள் சருமத்துக்கு தேவையான புரதம் நிறைந்த உணவுகள் மினரல்கள் விற்றமின்கள் நிறைந்தவை ஆகும். இவற்றை அதிக அளவிலும் காபோஹைதரேற்று அடங்கிய உணவுகளை குறைந்த அளவிலும் எடுப்பது உடலுக்கும் தோற்றத்துக்கும் நன்மை தரும்.

அடுத்ததாக உடற்பயிற்சிகள்,யோகா போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். எமது உடலை  இளமையாக வைத்திருக்கவும் சுறுசுறுப்புடன் இயங்கவும் இவை உதவுகின்றன.பயிற்சிகள் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் உடல் புத்துணர்வுடனும் பொலிவுடனும் காணப்படும்.

உடல் சுத்தம் என்பது நிரந்தர  அழகில் தவிர்க்க முடியாத ஒன்று .வெளியே சென்று வரும் போது பல்வேறு கிருமிகளை நாம் காவிக்கொண்டு வருகிறோம் எனவே முகம் உட்பட உடலினை முறையாக சுத்தம் செய்வது அவசியமாகும். சருமத்தின் தன்மைக்கேற்ப க்ளென்சர்களை தெரிவு செய்து முகத்தை காலை மாலை சுத்தம் செய்வதோடு உடலையும் சுத்தம் செய்ய வேண்டும்.

முகத்தை போன்றே கூந்தல் நகங்கள் கழுத்துப்பகுதி என ஒவ்வொரு அங்கத்தையும் முறையாக தூய்மைப்படுத்தி  இயற்கையில்  கிடைக்கும் பொருட்கள் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரித்து அவற்றை ஜொலிக்க செய்யலாம்.

அதேபோல சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க பொருத்தமான லோஷன்களை தவறாது பயன்படுத்த வேண்டும்.இதுபோன்று ஆரோக்கியம் தரும் விடயங்களை ஒவ்வொரு நாளும் முறையாக செய்வதன் மூலமாக மேலதிக நேரம் எதுவும் இன்றி நிரந்தமாக அழகை தக்க வைத்து கொள்ள முடியும்.

கருத்து தெரிவிக்க