சினிமா

கொரில்லா ட்ரைலரை விமர்சிக்கும் ரசிகர்கள் 

டான் சேன்டி  இயக்கியுள்ள கொரில்லா  படத்தில், ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு, ராதாரவி, சதீஷ், ராமதாஸ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையில், ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள கொரில்லா ஜூன் 21ம் திகதி திரைக்கு வருகிறது.

இந்த திரைப்படத்தில் ட்ரெய்லர் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் படம் முழுவதும் அரசியலாகவுள்ளது என முணுமுணுக்க தொடங்கியுள்ளனர் ரசிகர்கள்.

‘பேங்க் ஒப் இந்துஸ்தானி’ல் கொள்ளையடிக்கும் திருடர்கள், போலி மருத்துவர் பி.ஹெச். ராஜா, மிச்சர் சாப்பிடும் குங்குமம்-விபூதியிட்ட வெள்ளை சட்டை அரசியல்வாதி, விவசாயக் கடனை ரத்து செய் என்ற பதாகைகளை ஏந்திய போராட்டக்காரர்கள்  என கிடைத்த இடத்தில எல்லாம் அரசியலை வாரியிருக்கிறார்கள் என விமர்சனம் எழுந்துள்ளது.

கருத்து தெரிவிக்க