முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதற்கு, மூன்று அல்லது நான்கு சொட்டு தேனுடன், சிறிதளவு எலுமிச்சைச் சாறும் அரைத் தேக்கரண்டி சீனியும் கலந்து, இவற்றுடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெய் மூன்று சொட்டுகள் விட்டு கலந்து, பின் முகத்தில் பூசி நன்றாக தேய்க்க வேண்டும். பின் பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று நான்கு தடவைகள் செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக மறைந்து முகம் பொலிவுறும்.
கருத்து தெரிவிக்க