அமெரிக்கா தற்போது அந்நாட்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டுள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் உம் போட்டியிடுகின்றார்.
ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி , ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கான பிரச்சாரங்களும் தொடங்க உள்ளது.
இந்நிலையில் ட்ரம்பிற்கு எதிராக வெளியான கருத்து கணிப்பு காரணமாக அந்நாட்டு அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சி,என்,என் மற்றும் எஸ்,எஸ்,ஆர்,எஸ் செய்தி நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய கருத்துக் கணிப்பில் ட்ரம்ப்பிற்கு எதிராக 57% பேர் வாக்களித்துள்ளனர். 2019 இல் இருந்து ட்ரம்ப்பிற்கு எதிராக வந்த கருத்து கணிப்புகளில் இதுதான் மிக மோசமான கருத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனுக்கு 57% பேர் ஆதரவு அளித்து இருந்தனர். இதன் காரணமாக ட்ரம்ப் தோல்வியின் விளிம்பில் இருக்கின்றார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வர இயலாது என்பதனை ஜனநாயக கட்சியினர் கூறியுள்ளனர்.
ட்ரம்பின் இந்த நிலைக்கு நிறைய காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றது. அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியான முறையில் செயற்படுத்த தவறியது, கறுப்பின இளைஞர் மரணம் தொடர்பாக மெளனம் சாதித்தது, போராட்டங்களை கட்டுப்படுத்த தவறியது போன்ற முறைப்பாடுகள் அவருக்கு ஆதரவு குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளன.
இதற்கிடையில் பிடனுக்கு ஆதரவாக ஒபாமா களமிறங்கியுள்ளார். ஒபாமாவின் வருகை ட்ரம்ப் இற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், என்ன செய்வது என்ற நிலைக்கும் சென்றுள்ளார், என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க