சினிமா

பல கோடிகளை வசூல் செய்த சூர்யாவின் என்.ஜி.கே

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள என் ஜி கே திரைப் படத்தின் முதல்நாள் வசூல் விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

வழமையாக செல்வராகவன் இயக்கும் திரைப்படங்களுக்கான விமர்சனம் போன்றே இம்முறையும் கலப்பு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இப்படம் தமிழ் நாட்டில் 13.70 கோடி வசூல் செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஏனைய மாநிலங்களான தெலுங்கானா ஆந்திர பகுதியில் சுமார் இரண்டு கோடி ரூபாய் வரையிலும் அதேபோல வெளிநாடுகளில் 2 கோடி ரூபாய் வரையிலும் வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க