அழகு / ஆரோக்கியம்

கூந்தல் பராமரிப்பில் தவிர்க்க முடியாத கண்டிஷனர்

ஹேர் கண்டிஷனர் என்பது இன்றைய நாட்களில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருளாக மாறியுள்ளது. ஆனால் கண்டிஷனர் ஏன் பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அதனைப் பற்றிய சந்தேகம் இன்றும் நம்மில் பலருக்கு உண்டு. தலைமுடி பராமரிப்பில் கண்டிஷ்னரின் தேவை குறித்து தெளிவு வேண்டும்.

தலைமுடியை கவனமாக பராமரிக்க கண்டிஷனர் மிகவும் அவசியம். ஷாம்பு பயன்படுத்தி குளித்த பின்னர் கூந்தலில் ஒரு வறட்சி தன்மை ஏற்படும். அதுமட்டுமன்றி தலைமுடி விரைவில் வெயிலின் தாக்கத்துக்கு உள்ளாக நேரும்.

இவற்றில் இருந்து பாதுகாக்க கண்டிஷனர் பயன்படுத்துவது அவசியம். தலைமுடியை மென்மையாக மாற்றி அதனை எளிதில் நிர்வகிக்கக் கூடிய வகையில் அமைத்துக் கொடுப்பது கண்டிஷனர் ஆகும். தலையில் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, கூந்தல் உடையாமல் பாதுகாக்க உதவுகிறது .

சந்தையில் பலவிதமான ஹேர் கண்டிஷனர் கிடைக்கிறது. நீங்கள் இயற்கையான முறையில் தலைமுடியை கண்டிஷனர் செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதற்கான இயற்கை மூலப்பொருட்களும் உள்ளன.

எவ்வெனினும் அவை மண்டை ஓட்டில் படாது கூந்தலில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சிலர் கற்றாழை ஜெல்லினை தலைகுளித்த பின்னர் பயன்படுத்துவர்.இதுவும் ஒருவகையில் கண்டிஷனரை ஒத்த பலனை தருகிறது. முடிந்த அளவு இரசாயன பொருட்கள் குறைந்த கண்டிஷனரை பயன்படுத்துவது நல்லது.

கருத்து தெரிவிக்க