உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முறிப்பு தமிழ் வித்தியாலயத்தில் நிலவும் குறைபாடுகள்:முறையிட்ட ஊர் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின், கரைதுறைப்பற்றுப் பிரதேசசசெயலாளர் பிரிவிலே இயங்குகின்ற, முறிப்புத் தமிழ் வித்தியாலயத்தில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களிடம் ஊர் மக்கள் முறையிட்டுள்ளனர்.

மேலும் முறிப்பு பொது நோக்கு மண்டபத்திற்கு 01.06.2019 அன்று பாராளுமன்ற உறுப்பினரை அழைத்து ஊர்மக்கள் பாடசாலையில் நிலவும் குறைபாடுகளை அவரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.

இக் கலந்துரையாடலில் பாடசாலையில் பணிபுரிகின்ற ஆசிரியர்கள் பாடசாலைக்கு நேரந் தவறி சமூகம் தருவது, பாடசாலை அபிவிருத்திச் சங்க கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாமை, போன்ற பல்வேறு விடயங்கள் பேசப்பட்டது.

இக்கலந்துரையாடல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,முறிப்பு தமிழ் வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், அந்தப் பாடசாலையிலே பல்வேறுவிதமான குறைபாடுகள் காணப்படுவதாக எனக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தனர்.

அந்தக் குறைபாடுகளை அவர்கள் வலையக் கல்விப் பணிப்பாளருக்கு முகவரியிட்டு, ஓர் பிரதியை எனக்கு அனுப்பியிருந்தனர்.

அந்த வகையில் இன்று நான் இந்த முறிப்புக் கிராமத்திற்கு விஜயம்செய்து, இந்த பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர், மற்றும் பாடசால சார்ந்த பெற்றோர்களுன் நான் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தேன்.

இவர்கள் பல்வேறு விதமான முறைப்பாடுகளை கூறுகின்றபோது, வலயக்கல்வியினுடைய நிர்வாகம் சார்ந்த சில பிரச்சினைகளை அடையாளம் காணக்கூடியவாறு இருக்கின்றது.

குறிப்பாக இவர்கள் கூறுகின்ற பிரச்சினைகளில், இந்தப் பள்ளி்கூடம் சார்ந்த பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் கணக்கறிக்கை ஐந்து வருடங்களாக சமர்ப்பிக்கப்படவில்லை என்று முதலாவது குறைபாடாக அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

இதேபோல் அனைத்துத் திணைக்களங்களிலும், அந்த அலுவல்களுக்கான (பிங்கர் பிறின்ட்) செயற்படுத்தப்படவேண்டுமென்பது சட்டமாகும். எனினும் இந்தப் பாடசாலையில் மின்சார வசதி இருந்தும் இதுவரை அவ்வாறானதொரு வசதி ஏற்படுத்தப்படாமை திணைக்களம் சார்ந்த குறையாகவும் குற்றமாகவும் நான் கருதுகின்றேன்.

அதே வேளையிலே அபிவிருத்தி வேலைகள் இடம்பெறுகின்றபோது, அதனுடைய மதிப்பீடு என்ன, நிதி எவ்வளவு கிடைக்கப்பெறுகின்றது, செலவு என்ன என்பது தொடர்பான வெளிப்படையான கணக்குகள் இந்த பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கு காட்டப்படுவதில்லை. அவர்களுக்கு அந்த அபிவிருத்திச் செயற்பாடுகளில் பல சந்தேகச்கள் ஏற்படுகின்றது.

இதனைவிட பாடசாலையின் அபிவிருத்திச் சங்கப் பொருளாளர் தெரிவு இடம்பெறும்போது, மகப்பேற்று விடுமுறையில் இருந்த பெண் ஆசிரியர் ஒருவரை தன்னிச்சையாக பொருளாளர் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்.

பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களை அதிபர் தன்னிச்சையாக மாற்றிக்கொள்கின்றார். ஒரு பொதுக்கூட்டம் கூடுவதில்லை முன்னறிவித்தல் இல்லாமல் மாற்றிக்கொள்கின்றார் என பல்வேறு விதமான குறைபாடுகளை இந்தப் பெற்றார்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இன்று எனக்குத் தெரிவித்திருக்கின்றார்கள்.

நான் இது தொடர்பாக வலயக்கல்விப் பணிப்பாளரிடம் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு கூறியிருக்கின்றேன்.
எதிர்வருகின்ற நாட்களில் வலயக்கல்விப் பணிமனையுடன் தொடர்புகொண்டு இது தொடர்பான நிலைப்பாட்டை ஆராய்வதாக நான் தீர்மானித்திருக்கின்றேன். என்றார்.

கருத்து தெரிவிக்க