சினிமா

தளபதி 64 – இயக்குநர் பெயர் வெளியானது

விஜய்யின் தளபதி 64 படத்தை இயக்கப்போவது யார் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதன்படி, விஜய் – லோகேஷ் கனகராஜ் உடன் இணைவது உறுதியாகி இருப்பதாக விஜய்க்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குநர்களின் பட்டியலில் அருண்ராஜா காமராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இடம்பிடித்து இருந்தனர்.

இதேவேளை, விஜய் தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் குழந்தைகள் ரசிக்கும்படியாக திரில்லர் பாணியில் உருவாகுவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தில் விஜய்யுடன் த்ரிஷா நடிப்பதாகவும், ராஷ்மிகா மந்தானா நடிப்பதாகவும் சில வதந்திகள் பரவி வருகிறது. விஜய், தளபதி 63 படத்தை முடித்த பிறகு தளபதி 64 படத்தின் நாயகி மற்றும் மற்ற கதபாத்திரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாக தெரிகிறது.

அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு, ரெபா மோனிகா, வர்ஷா பொலம்மா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க