விளையாட்டு செய்திகள்

உலகக்கிண்ணம் – தென்னாபிரிக்கா பங்களாதேஷை எதிர்கொள்கிறது

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டியில், தென்னாபிரிக்க அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

லண்டன் த ஓவல் மைதானத்தில் இன்று 21ஆம் திகதி இலங்கை நேரப்படி மாலை 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில், தென்னாபிரிக்க அணிக்கு ஃபஃப் டு பசிசும், பங்களாதேஷ் அணிக்கு மஷ்ரஃபி முர்டாசாவும் தலைமை தாங்கவுள்ளனர்.

முன்னர் இடம்பெற்ற போட்டி ஒன்றில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி கண்டுள்ள நிலையில், இன்று இரண்டாவது போட்டியில், தென்னாபிரிக்கா களமிறங்குகின்றது.

கருத்து தெரிவிக்க