லடாக்: லடாக் எல்லை பிரச்சனையில் இந்தியா செயலாற்றிய விதம் சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது, அதேபோல் அந்நாட்டு படைகளை பின்வாங்கவும் வைத்து உள்ளது.
இந்தியா – சீனா இடையிலான எல்லை பிரச்சனை குறித்து இன்று லடாக்கில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இரண்டு நாட்டு ராணுவத்தின் லெப்டினன் ஜெனரல்கள் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. கடந்த மாதம் இந்த சண்டையை தொடங்கியது என்னவோ சீனாதான்.
சீனாதான் முதல் நாடாக எல்லையில் அத்துமீறியது. லடாக்கில் சீன ஹெலிகாப்டர் எல்லையில் அத்துமீறியதும், சிக்கிமில் சீன வீரர்கள் இந்திய வீரர்களை தாக்கியதும்தான் சண்டைக்கு காரணமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் சீனா மிக தீவிரமாக போருக்கு தயார் ஆகி வந்தது. போர் விமானங்களை கூட எல்லையில் இறக்கியது. போருக்கு தயார் ஆகுங்கள் என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் கூட கூறினார். ஆனால் இப்போது அதே சீனா பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டு உள்ளது. அதே சீனாதான் இந்தியாவுடனான எல்லை பிரச்னையை தீர்க்க உறுதியாக இருக்கிறோம் என்று கூறி உள்ளது. சீனாவின் இந்த மனமாற்றத்திற்கு நிறைய காரணம் உள்ளது.
சீனா இப்படி பின்வாங்க முக்கிய காரணம், இந்தியா – அமெரிக்கா இடையிலான நெருக்கம்தான் என்கிறார்கள். சீன பிரச்சனை குறித்து இந்தியா அமெரிக்காவிடம் பேசியது. அதேபோல் அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி 25 நிமிடமே இது தொடர்பாக பேசினார். அமெரிக்காவை பிரதமர் மோடி வேகமாக கூட்டு சேர்ந்தது முக்கியமான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்காக பார்க்கப்பட்டது. இந்தியாவின் இந்த மூவ் சீனாவை அதிர்ச்சி அடைய வைத்தது.
சீனாவின் செயலுக்கு இந்தியா இந்த முறை அமைதியாக பதில் அளிக்கவில்லை. சீனாவின் செயலுக்கு இந்தியா சீனாவின் மொழியிலேயே பதில் அளித்தது. அத்துமீறல் என்னும் சீனாவின் மொழியை இந்தியா கையில் எடுத்தது. லடாக்கில் எல்லையில் சீனா 2000 வீரர்களை குவித்தால் இந்தியா 3000 வீரர்களை குவித்தது. சீனாவிற்கு இணையாக வேகமாக இந்தியா விமானப்படையை தயார் செய்தது. இதனால் பதற்றம் அதிகரித்தது.
இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. எல்லை பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் சண்டைக்கும் தயாராக இருக்கிறோம் என்று இந்தியா சொல்லாமல் சொல்லியது. இந்தியா தொடர்ந்து படைகளை எல்லை நோக்கி திருப்பியது. சீனாவை இந்தியாவை இந்த மூவ் அதிர்ச்சி அடைய வைத்தது.
மூன்றாவதாக லடாக் எல்லையில் பிரச்சனை நடக்க முக்கியமான காரணங்களில் ஒன்று சிக்கிம் மற்றும் லடாக் பகுதியில் இந்தியா செய்யும் கட்டுமான பணிகள். இந்த கட்டுமான பணிகளை ஒடுக்கும் வகையில்தான் சீனா அங்கு தொல்லைகளை செய்தது. ஆனால் சீனா கொடுத்த அழுத்தம் எதையும் இந்தியா கருத்தில் கொள்ளவில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், நாங்கள் கட்டுமானத்தை தொடர்வோம் என்று இந்தியா மிகவும் உறுதியாக இருந்தது
நான்காவது காரணம் மிக முக்கியமானது ஆகும். சீனாவுடன் எல்லை பிரச்சனை என்று தெரிந்தவுடன் பிரதமர் மோடி அவரே முன் வந்த மேஜர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முக்கியமாக டோக்லாம் பிரச்னையை தீர்த்த அதே குழுவை மோடி களமிறங்கினார். மோடி இப்படி முன்னிலையில் வந்து பேசுவார் பணிகளை செய்வார் என்று சீனா நினைக்கவில்லை.
இன்னொரு பக்கம் உலகம் முழுக்க இந்தியா ராஜாங்க ரீதியாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா மூலம் சீனாவிற்கு இந்தியா அழுத்தம் கொடுத்தது. இந்தியாவின் இந்த செயல் சீனாவை சிந்திக்க வைத்தது. யானையுடன் மோதினால் நமக்குத் தான் சேதம் என்று சீனா உணர்ந்து கொண்டது. அதன் பின்பே சீனா அமைதி என்றும் , பேச்சுவார்த்தை என்றும் பேச தொடங்கி உள்ளது.
கருத்து தெரிவிக்க