உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

தாக்குதலுக்கு 25 நாட்களுக்கு முன்னரே ஸஹரான் பதவி விலக்கப்பட்டார்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெறுவதற்கு 25 நாட்களுக்கு முன்னரே தௌய்த் ஜமாத் அமைப்பின் தலைமை பொறுப்பிலிருந்து ஸஹரானை விலக்கியதாக அந்த நாட்களுக்குள் அவர் அந்த தலைமை பொறுப்பை பலவந்தமாக பெற்றுக் கொண்டதாக மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தை தலைமை தாங்கிய முஹம்மட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா என்பவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இவர் தௌய்த் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதுடன் சிரியாவின் அலெப்போ பிரதேசத்தில் யுத்தப் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அவர் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

கப்பொலை பிரதேசத்திலுள்ள சப்பாத்து கடையொன்றில் வேலை செய்துகொண்டிருந்த போது அவரும் அவருடைய சகேதாரனையும் பொலிஸார் இந்த சம்பவத்தின் போது கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் அலெப்போ பிரதேசத்தில் இராணுவ பயிற்சி பெற்றுள்ளதாகவும்  செச்னியாவைச் சேர்ந்த ஒருவரிடம் எனவும், தன்னுடன் சேர்த்து 12 வெளிநாட்டவர்கள் இந்த பயிற்சியை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

திகன பிரதேசத்தில் இடம்பெற்ற சிங்கள மற்றும் முஸ்லிம் கலவரத்தின் பின்னர் தமது அமைப்பிற்கு பெரும்பாலானோர் சேர்ந்து கொண்டதாகவும், தமது அமைப்பு சிங்கள மக்களுடன் மிகுந்த கோபத்துடன் இருந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பிற மதத்தினரைச் சேர்ந்தவர்களை கொல்வதற்கு முன்வருவோர் சொர்க்கத்திற்கு போவார்கள் என ஸஹரான் எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். அது உலகிலுள்ள எந்தவொரு முஸ்லிம்களாக இருந்தாலும் சரி. சிலை வணக்கம் பொய் வணக்கமாகும். அதனால் கிறிஸ்தவ உருவச் சிலை, புத்த சிலைகளை அழித்து விடுங்கள் என அவர் போதித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க