சினிமா

8 கோடி ரூபாய் நஷ்டம் காஜல் அகர்வாலுக்கு அதிர்ச்சி!

சீதா படத்தை வாங்கியவர்களுக்கு 8 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இது காஜல் அகர்வாலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம்ரவியுடன் கோமாளி படத்தில் நடிப்பதுடன், கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் – 2 படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ள நிலையில், சீதா படத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கில் பெல்லம் கொண்ட சீனிவாஸ் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ள சீதா படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படம் வெற்றி பெற்று தெலுங்கில் மேலும் படவாய்ப்புகள் வரும் என்று காஜல் அகர்வால் நம்பினார். ஆனால் அந்த படம் எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்துள்ளது.

சீதா படத்தை 15 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து இருந்தனர். படம் தோல்வியானதால் படத்தை வாங்கியவர்களுக்கு 8 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது காஜல் அகர்வாலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஜல் அகர்வாலுக்கு தற்போது 33 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் அவசரம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தனது திருமணம் குறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி ஒன்றில், “திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முக்கியமானது. எனது வருங்கால கணவரை இதுவரை நான் சந்திக்கவில்லை. காதலிப்பதற்கும் எனக்கு நேரம் இல்லை. முழுகவனமும் சினிமாவில்தான் இருக்கிறது” என்றார்.

கருத்து தெரிவிக்க