அரச உளவுப் பிரிவின் அப்பாறை அலுவலகத்திற்கு கிடைத்த தகவல்களை அடுத்து நீண்ட நேர விசாரணையின் போது ஸஹராணின் அப்பாறை மாவட்ட தலைவரான கல்முனை சியாமினால் மறைந்து வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாவை அம்பாறை பொலிஸாருடன் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.
இதில் 15 லட்சம் ரூபா இரு நாட்களுக்கு முன்னர் கண்டுடெடுக்கப்பட்டதாகவும், மிகுதி 35 லட்சம் இன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஷாஹூல் ஹமீட் ஹமீஸ் முஹம்மட் இல்லாவிட்டால் கல்முனை சியாம், அதுவும் இல்லாவிடின் அபு ஹசன் என்ற பெயரில் அழைக்கப்படும் நபர் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த பெருந்தொகையான பணம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை சியாமின் மாமனாருக்கு இந்த பணம் கொடுக்கப்பட்டு இருந்ததுடன் அவை வீட்டிலுள்ள அலுமாரியில் இருந்த காற்சட்டை பைகளில் அவற்றின் ஒரு பகுதி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் ஏனையவை இருவட்டுக்கள் இயக்கும் கருவியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை உளவுப் பிரிவினரும் பொலிஸாரும் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இரண்டு தங்கச் சங்கிலிகள், ஒரு சோடி தோடு, மோதிரம் ஆகியனவும் உளவுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
கல்முனை சியாமினால் அட்டாளைச்சேனை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மடி கணிணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க