பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமது ஊழியர் சேமலாப நிதி பணத்திற்கான விண்ணப்பங்களை அட்டன் தொழில் திணைக்களத்தில் சமர்ப்பிக்க செல்லும் போது தாம் பல்வேறுபட்ட சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மக்கள் சுட்டிகாட்டுகின்றனர்.
வெகு தூரத்தில் இருந்து பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வரும் தொழிலாளர்கள் ன் விண்ணப்பங்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தாலும் அவை பல்வேறு காரணங்களை காட்டி நிராகரிக்கப்படுவதாகவும் மக்கள் விசனபடுகின்றனர்.
அட்டன் தொழில் திணைக்களத்தில் தொழிலாளர்களை விட தரகர்களே கூடுதலாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
இது குறித்து கேள்வி எழுப்பும் தொழிலாளர்கள் அங்குள்ள ஒரு சில அதிகாரிகளால் தாம் உதாசீனம் செய்யபடுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஊ . சே . நிதி பணத்தை தரகர்கள வாயிலாக பெற்று கொள்ளும் தொழிலாளர்கள் தரகு பணமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கவேண்டியுள்ளது.
எனவே இது விடயமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
கருத்து தெரிவிக்க