உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மட்டக்களப்பு அபிவிருத்திக்குழுவுக்கு தமிழர்கள் அவசியம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 74வீதம் தமிழர்கள் வாழ்கின்ற நிலையில் சகோதர முஸ்லிம் இனத்தவர்களுக்கு எவ்வாறு மூன்று பிரதிநிதிகளை நியமிக்க முடியும் என என முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்டஉறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குமான மாவட்ட அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்திக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் இணைத்தலைவர்களாக மூன்று முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக்குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு இணைத்தலைவர்களாக அமைச்சர் அமீர்அலி, அமைச்சர் மௌலானா, முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் காபீர் நசீர்அகமட் என மூன்று முஸ்லிம்களை நியமித்ததாக அறியக் கூடியதாக இருந்தது.

இம்மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அண்ணளவாக 74வீதம் தமிழர்களும், 23வீதம் முஸ்லிம்கள், 01வீதம் சிங்களவர்கள் இருக்கும் நிலையில், 23வீதம் உள்ள முஸ்லிம்களுக்கு எவ்வாறு மூன்று பிரதிநிதிகளை நியமிக்க முடியும்.

முப்பது வருடயுத்தத்தின் தமிழ்ப் பிரதேசங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக, மண்முனைமேற்கு(வவுணதீவு), மண்முனைதென்மேற்கு(பட்டிப்பளை), போரதீவுப்பற்று (வெல்லாவெளி), ஏறாவூர்பற்று(செங்கலடி), கோறளைப்பற்றுதெற்கு (கிரான்), கோறளைப்பற்று வடக்கு(வாகரை) இவைமட்டுமின்றி மீளக்குடியமர்விற்கான அபிவிருத்தி வேலைகள், போராளிகள் தொடர்பான அபிவிருத்தி, கல்வி, காணி, சுகாதாரம்;, மீன்பிடி, நியமனம், பதவிஉயர்வு, கலாசார புனரமைப்புக்கள், விதவைகள் மறுவாழ்வு, இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு, கைதிகள் விடுதலை, கால்நடை, விவசாயம் இவை அனைத்திலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பிரதேசங்கள் மிக விரைவாக அபிவிருத்தி செய்ய வேண்டி உள்ளது.

இவ்வளவு வேலைகளைச் செய்யவேண்டிய நிலையில் இப்பிரதேசங்கள் வறுமையில் வாடுவதாலும், தமிழ்ப் பிரதேசங்களாக இருப்பதாலும், 74 வீதம் தமிழர்கள் உள்ளதாலும் தமிழ்ப்பகுதிக்கு அபிவிருத்தி வேலையில் முன்னிலை வழங்கப்பட வேண்டும்.

இவைமட்டுமின்றி முப்பது வருடகாலமாக இப்பகுதிகளுக்கு பல விடயங்களில் புறக்கணிப்பு நிகழ்த்தப்பட்டன.

இந்தநிலையில் இம் மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு மூன்று முஸ்லிம்களை நியமிக்கப்பட்டதென்பது நீதியான விடயங்களல்ல. எனவே இந் நியமனத்தை நிறுத்தி தமிழர்களை இணைத் தலைவர்களாக நியமிக்க வேண்டும் என்றார்

 

 

.

கருத்து தெரிவிக்க