பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசாங்கத்தில்; சாத்வி நிரஞ்சன் ஜோதி இணை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர் அங்குள்ள பதேபூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
காவி உடை அணிந்து பெண் துறவியாக செயற்படு;ம் சாத்வி நிரஞ்சன் ஜோதி காடு வளர்த்தல், சமூக-கலாசார மதிப்பீடுகளை பாதுகாத்தல், பசு பாதுகாப்பு, ஏழை குழந்தைகள் மேம்பாடு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு திருமண உதவி செய்தல் போன்ற நலத்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
கருத்து தெரிவிக்க