கட்டுரைகள்

இலக்கியத்தில் பெண் புலவர்களின் முரண்பாட்டுக் கருத்துக்கள்

வேல் நந்தகுமார்- விரிவுரையாளர்( கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

—————————————————————————————————————-

சங்க கால பெண்பாற் புலவர்களாக.

1. அஞ்சியத்தை மகள் நாகையார்

2. அஞ்சில் அஞ்சியார்

3. ஆதி மந்தியார்

4. ஊண்பித்தை

5. கழார்க்கீரன் எயிற்றியார்

6. குமிழிஞாழலார் நப்பசலையார்

7. குறமகள் குறி எயினி

8. நப்பச்சலையார்

9. நன்னாகையார்

10. நெடும் பல்லியத்தை

11. போந்தைப் பசலையார்

12. வருமுலை யாரித்தி

13. வெண் பூதியார்

14. வெண்மணிப்பூதியார்

15. வெள்ளி வீதியார்

இத்தகைய பெண்பாற் புலவர்களின் பாடல்களை பால்நிலைச் சமத்துவ நோக்கும் போது இவர்களும் பெண் குறித்த கனவு வாழ்வு, கற்புவாழ்வு என்பவற்றை ஆண்பாற் புலவர்கள் பாடிய அதே மனநிலையில் நின்றவாறுதான் பாடியுள்ளதைக் காணமுடிகின்றது.

எடுத்துக் காட்டுக்களாக.

“ பலர்புகு வாயி லடைப்பக் கடவுநர்

வருவீ ருளீரோ லெனவும்

வாரார் தோழிநங் காதலோரே”

என்ற நன்னாகையார் பாடல் வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் குறித்த பருவத்தில் வராததால் தலைவிக்கு அவன் கொடியவனாகவும் பொய்யனாகவும் தோன்றுகிறான். இதே போல தலைவன் இல்லத்தில் அவனுடன் வாழும் தலைவியைக் காணச் சென்ற தோழிக்குத் தலைவி.

“…… உரைசால் பாண்மகள்

எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும்

புதுவது புனைந்த திறத்தினும்

வதுவை நாளினும் இனியனால் எமக்கே”

என்று தலைவன் இனியவனாக இருப்பதைப் பெருமையாகப்பேசி மகிழ்கிறாள். இதன்மூலம் கற்பு வாழ்வில் ஈடுபட்ட பிறகு தலைவி தலைவனோடு சேர்ந்திருக்கும் போது மட்டுமே மகிழ்ச்சியாக இருந்தாள். அவனைப் பிரிந்த பிறகு வாழ்க்கையில் அனைத்தையும் இழந்தவள் போல வேதனையுற்றாள். என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

பெண்பாற் புலவர்களின் களவுப் பாடல்கள் தலைவி தோழி, செவிலி ஆகிய பெண்களின் கூற்றுவழி அமைந்து சங்ககால பெண்களின் பாதுகாப்பற்ற நிலையையும், பெண்ணுக்குப் பெண்ணே ஆறுதலாக இருந்ததையும் தெரிவிக்கின்றன. மேலும் ஆணைவிட பெண்ணுக்குள்ள கற்பு வாழ்க்கை குறித்த ஈடுபாட்டையும் தலைவன் எப்போதும் தன் மீது அன்புடையவனாக இருக்க வேண்டும் என்ற நியாயமான உணர்வு கூட ஆணின் கூற்றுவழி வெளிப்படுத்தப்பட்டுள்ளதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

பெண்பாற் புலவர்களின் கற்புப்பாடல்கள் வழி கற்பு வாழ்க்கையில் தலைவனை விடவும் தலைவியே பிரிவுத் துன்பத்தால் பொதும் வருத்தமுற்றிருந்தாள் அவளுக்கு ஆறுதல் தருபவளாக மட்டும் இல்லாமல் ஆற்றியிருப்பதற்குரிய மன அமைப்பை உருவாக்கி விடுபவனாகவும் தோழி இருந்தாள். இவ்விதம் ஆற்றியிருக்கும் தலைவியின் காதல் மாண்புகளே தலைவனால் பெருமையாக நினைக்கத் தகுந்தன ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் சங்ககால ஆண்பாற் புலவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே பால்நிலைச் சமத்துவம் இன்மையையே காட்டுகிறது. அத்துடன் பெண்பாற் புலவர்களின் அகத்தினைப் பாடல்களில் கூட தலைவிக்கான தனித்துவத்தை இனங்காண முடியவில்லை.

குறிப்பாக ஒளவையார் பாடல்களிலும் இதனை தரிசிக்க முடிகிறது.

நாடா கொன்றோ காடா கொன்றோ………..

எனத் தொடங்கும் ஒளவையாரின் புறநானூற்றுப் பாடலில்

“எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நீபனே”

என்கிறாh.; இங்கு பெண்பாற் புலவரான ஒளவையார் எந்த நிலத்தில் ஆண்கள் நல்லவர்களாக வாழ்கிறார்களோ அந்த நீலமே நல்ல நிலம் என கூறியிருப்பது பால்நிலைச் சமத்துவ நோக்கில் சர்ச்சைக்குரிய கருத்தாகவே விளங்குகிறது. இதே போல காதலில் தோற்ற ஆண் தன் உணர்வுகளை வெளிப்படுத்த வரைபாய்தல், மடவேறுதல் என்பவை கூறும் சங்க இலக்கியங்கள் பெண் காதலில் தோற்றால் தன் உணர்வுகளை இப்படியாக வெளிப்படுத்த எந்த விடயங்களையும் கூறவில்லை என்பதும் இவ்விடத்தில் நோக்கத்தக்கது.

கருத்து தெரிவிக்க