அமிர்தலிங்கத்துக்கு எதிரான முஸ்லிம் தலைவர்கள் செய்த தவறை தமது கட்சி செய்யமுடியாது
கட்சி தலைமை எடுக்கும் தீர்மானத்திற்கமையவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவர் என தமழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி ழுப்பியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனின் ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது கடந்த 2ம் திகதி புதிதாக பலர் சமுர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
வடக்கில் முழுக்க முழுக்க தமிழ் தேசிய கூட்மைப்பினரே சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் எதிர்வரும் 2ம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 13073 பேரூக்கு புதிதாக சமுர்தி கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூறினார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் சமுர்த்தி பயணாளிகள் அதிகளவானவர்கள் உள்ளனர்
இந்தநிலையில் தற்போது எமது கட்சியின் ஊடக பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வழிநடத்தலின் கீழ் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து இந்த சமுர்த்தி கொடுப்பனவினை பெற்றுக்கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர்.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதற்கட்டமாக கிளிநொச்சி மத்தியமகாவித்தியாலய மைதானத்தில் 4000 பேருக்கு சமுர்தி வழங்கப்படுவதுடன் தொடர்ந்து ஏனைய நாட்களில் மீதி அனைவருக்கும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 7221 பேருக்கும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 2775 பேருக்கும், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 1944 பேருக்கும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 1133 பேருக்கும் இது வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் அமைச்சர் ரிசாட் பதியூதீன் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.
வடக்கு கிழக்கில் தமிழ், தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர்.
மகிந்த ராஜபக்ஸ அரசினால் தமிழ் மக்கள் மீது 2009 இல் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு தமிழ் மக்கள் சாகடிப்பட்ட போது எந்தவொரு முஸ்லிம் தலைவர்களும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
மாறாக முஸ்லிம் தலைவர்களும், சில மக்களும் பள்ளிவாசல்களிலும், தென் பகுதிகளில் சில பிரதேசங்களிலும் பாற்சோறு வழங்கி சிங்கள மக்களுக்கும் இராணுவத்தை உற்சாகம் கொடுக்கும் வகையில் செயற்பட்டிருந்தார்கள். என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார்.
அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அவருக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படட போது அப்போதிருந்த முஸ்லிம் அமைச்சர்களாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாவும் இருந்த ஏழு பேர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்கள்.
ஆனால் அவர்கள் விட்ட அதே தவறுகளை நாங்களும் விட்டால் தொடர்ந்தும் இந்த நாட்டில் இஸ்லாமிய தலைவர்களும், ஈழத்தமிழர்களும் ஒன்றாக பயணிக்க முடியாது இணைந்த வடக்கு கிழக்கு என்ற சொற் பிரயோகத்தை நாம் பேசமுடியாது போய்விடும்
எனவே கள யதார்த்தை புரிந்துகொண்டு எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது போன்றோ கொல்லி பிடுங்குவது போன்றோ நடந்து கொள்ளாது ஒரு சமூகம் பாதிக்காத வகையில் மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டியது நமது கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே றிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாம் தொடந்து ஆராய்ந்து வருகின்றோம்
ஒவ்வாரு மாவட்டத்திலும் உள்ள கட்சி அலுவலங்களோடும், பேசியிருக்கிறோம், கட்சியின் மத்திகுழுவிலும், நாடாளுமன்ற குழுவிலும் ஆராயவுள்ளோம்.
எனவே ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்து அந்த மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் ஒரு தீர்மானத்தை மேற்கொள்வோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரரேரணைக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவும், அதேவேளை தமிழரசு கட்சி சார்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அமைச்சருக்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாடு எடுக்கும் என அவரிடம் வினவியபோது,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மத்திய குழு கூடி இது தொடர்பில் தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வரவு செலவு திட்டம், பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை ஆகியவற்றிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் முடிவிற்கமைய நீங்கள் ஆதரவளித்தீர்கள். இம்முறை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயமாக முடிவெடுக்க கூடிய சூழல் ஏற்படுத்தப்படுமா? அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு அமைவாக முடிவு எடுக்கப்படுமா என அவரிடம் வினவியபோது,
ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையிக் முடிவுக்கு மாறாக நடந்துகொண்ட இருவர் வெளியே நிற்கின்றார்கள்.
அவ்வாறான நிலை ஏற்படாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை எடுக்கும் முடிவிற்கே அனைவரும் இணைந்து நிற்பர் என அவர் தெரிவித்தார்
கருத்து தெரிவிக்க