உள்நாட்டு செய்திகள்புதியவை

தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் – சுதந்திரக் கட்சி!

புலனாய்வுத் தகவல்களை அம்பலப்படுத்துவதானது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“ 21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவானது, திறந்த விசாரணைகளையே முன்னெடுக்கின்றது.

இதனால் பாதுகாப்பு தொடர்பான பல தகவல்கள் வெளியில் கசியும் நிலை உருவாகியுள்ளது. நேற்றைய தினம்கூட முக்கிய பல புலனாய்வுத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்படியே விசாரணை நடத்தினால் அது தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

‘மிலேனியம் சிற்றி’ சம்பவத்தை நாம் இன்னும் மறந்துவிடவில்லை. எனவே, நாட்டின் பாதுகாப்புக்கு, புலனாய்வுப் பிரிவுக்கு எவ்வித அச்சுறுத்தலும், தாக்கமும் ஏற்படாத வகையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.’’ என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா.

கருத்து தெரிவிக்க