சினிமா

வைரலாகும் வரலட்சுமியின் வீடியோ

`சேஸிங்’ என்ற எக்‌ஷன் திரில்லர் படத்தில் வரலட்சுமி போலி ஏதுமில்லாமல் சண்டைபோடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியுள்ளது.

கே.வீரக்குமார் இயக்கத்தில் வரலட்சுமி நடித்து வரும் இந்த திரைப்படத்தில் ஒரு ஆணை கீழே வீழ்த்தி அடிக்கும் காட்சி மிக வேகமாக பரவி வருகின்றது.

படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி, தற்போது கே.வீரக்குமார் இயக்கத்தில் சேஸிங் என்ற எக்‌ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க மலேசியாவில் இந்த படம் உருவாகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு சமீபத்தில் படமாக்கியுள்ளது. அதில் வரலட்சுமி கயிறு பயன்படுத்தாமல், டூப் ஏதுமில்லாமல் சண்டை போடுகிறார்.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வரலட்சுமி அதில், கடுமையான உழைப்புக்கு கிடைத்த பலன், இதை யாரும் வீட்டில் முயற்சிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க