உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ரிசாத்துக்கு எதிரான வழக்கை ஆரம்பத்தில் இருந்து விசாரணை – மேன்முறையீட்டு மன்றம் 

அமைச்சர் ரிசாத் பதியுதீன் உட்பட்டவர்களுக்கு எதிராக வில்பத்து வனப்பகுதியை கையக்கப்படுத்தி வீடமைப்புகளை மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை புதிதாக விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கை தேசிய சுற்றாடல் நீதிக்கான நிலையம் தாக்கல் செய்துள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கின் தீர்;ப்பை ஆகஸ்ட் 6 ஆம் திகதி வழங்குவதாக இரண்டு நீதியரசர்களை கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

எனினும் தற்போது ஜனக் டி சில்வா மற்றும் நிசாந்த பந்துல கருணாரட்ன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்து நடத்திச்செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க