நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் உலகத்திற்கும் மக்களுக்கும் காண்பிப்பதற்காக ஜனாதிபதியையும் பிரதமரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் உள்ளடக்கிய புதிய பாதுகாப்பு சபையொன்றை உருவாக்க வேண்டும்
இந்த யோசனை உட்பட்ட ஏழு அம்சங்களைக் கொண்ட மனு இன்று மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களிடம் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
‘தேசிய வழி’ என்ற தலைப்பில் இந்த யோசனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர், பலமான சிவில் பொதுமக்கள் அமைப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள ‘தேசிய வழி’ எனும் பாதையின் ஊடாக நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று குறிப்பிட்டார்.
இந்தக்கோரிக்கைகளுக்கு, ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர், உள்ளிடட ஏனைய அரசியல் கட்சித் தலைவர்கள், சமய தலைவர்களின் ஒப்புதல் பெறப்படவுள்ளது
.
சகலவிதமான பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ளும் அமைப்புகள் அவற்றிக்கு உதவி வழங்கும் நிறுவனங்கள் சர்வதேச பயங்கரவாதிகளுடனான கொடுக்கல் வாங்கல் செய்யும் நிறுவனங்களை உடனடியாக தடை செய்தல்
அத்துடன் வன்முறையின்பால் மக்களை தூண்டி வெறுக்கத்தக்க உரைகளை நிறுத்தி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சகல மத மற்றும் கொள்கைகளுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகள் இருந்தால் அதனையும் செயலிழக்கச் செய்தல்,
மேலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் உலகத்திற்கும் மக்களுக்கும் காண்பிப்பதற்காக ஜனாதிபதியையும் பிரதமரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் உள்ளடக்கிய புதிய பாதுகாப்பு சபையொன்றை உருவாக்குல், வெளிநாட்டு புலனாய்வுப்பிரிவுகள் தகவல் சேவைகளுடன் தொடர்ச்சியான உறவை பேணி வருதல்.
எந்தவொரு நாட்டிற்கும் நாட்டின் இறைமையை மீறும் பாதுகாப்புச் செயற்பாடுகளில் தலையீடு செய்யாதிருக்க அரசாங்கமும் பாதுகாப்புச்சபையும் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புள்ளவர்களின் சகல நேரடி மற்றும் மறைமுக வங்கிக்கணக்குகள், அசையா அசையும் சொத்துக்கள் என்பவற்றை அடையாளம் கண்டு, அரசுடமையாக்குதல்
மேலும் மிகச் சிறிய அடிப்படைவதக்குழுவை செயல் இழக்க செய்யும் கூடுதல் பொறுப்பை சமாதானத்தை விரும்பும் முஸ்லீம் சமூகமும் ஏற்கும் நிலையில் அடிப்படை வாதிகள் தொடர்பான சரியான தகவல்களை பாதுகாப்பு பிரிவுகளுக்கு வழங்குவதற்காக முறையான திடடமொன்றை தயாரிப்பது.
சமாதானத்தை விரும்பும் முஸ்லீம் தலைவர்களின் ஒதுக்க முடியாத பொறுப்பாக வகுத்தல் போன்ற தலைப்புக்களில் தமது ஆறு அம்ச கோரிக்கைகள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இஸ்லாம் அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்த இடமளிக்க முடியாது,
இதற்காக மேற்கொள்ள வேண்டிய சட்ட , பாதுகாப்பு பொருளாதார சமூக மறுசீரமைப்புகளுக்கு பல வருடங்களை ஒதுக்கமுடியாது.
பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு அவர்களுக்கு உதவுவர்களையும் முற்றாக ஒடுக்குவதற்கு தேவையான சட்டங்கள் சில மாதங்களுக்குள் முன்னெடுக்க வேண்டும்.
தேவையான சமூக பொருளாதார மறுசீரமைப்புகளை சீரமைக்க வேண்டும்
சடலங்களுக்கு மேல் சென்று தமது அதிகாரத்திற்காக செயற்பட இடமளிக்கக் கூடாது
இவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் அம்பலப்படுத்த வேண்டும் குறுகிய காலத்திற்குள் கட்சி நிற பேதமின்றி இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பது தேசிய வழியின் எதிர்பார்ப்பாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க