மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சாலினி பெரேரா இன்று 28ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பாக மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க, கடந்த 14ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அமித் வீரசிங்க, பொலிஸ் தலைமையகத்தினால் நியமிக்கப்பட்ட கலவரங்கள் தொடர்பான விசேட விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான குறிப்பை நாளை 29ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் விசேட விசாரணை பிரிவுக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க