இலங்கை

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் கவனம் செலுத்தியுள்ள கல்வி அமைச்சு!

கொரோனா தாக்கத்தினால் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை திறந்து காலை, மாலை என  வகுப்புகளை நடத்துவது தொடர்பிலுள்ள நிலைமைகளை கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது. அந்த வகையில், மாணவர்களை சமூக இடைவிலகலுடன் அமரச் செய்வது தொடர்பிலும் ஆராயப்படுகிறது. எனினும், நாட்டில் உள்ள பல பாடசாலைகளில் வகுப்பறை நெருக்கடி காணப்படுகிறது. அதேநேரம் பாடசாலையை ஒரே நேரத்தில் நடத்துவதால் மாணவர்கள் அதிகமாக ஒன்றுகூட வாய்ப்பாக அமையும். அத்துடன் பாடசாலைகளில் உள்ள சுகாதார வசதிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். இதற்காக 32 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பரீட்சைகள் நடைபெற இருப்பதால் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் கல்வி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க