இலங்கை உட்பட சில ஆசிய பசுபிக் நாடுகளில் கொரோனா தாக்கத்தினை கட்டுப்படுத்தும் என்ற வகையில் கருத்து சுதந்திரம் தடைசெய்யப்பட்டு வருவதாக ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் மிக்செய்ஸ் பெச்சலெட் தெரிவித்துள்ளார்.
அந்த அடிப்படையில் இலங்கை பொலிஸ் உதவி அதிபர் கொரோனா வைரஸ் பற்றிய பொய்யான செய்திகளை பரப்புபவர்களை கைது செய்யப்படுவர் என அறிவித்திருந்தார். அத்துடன் இலங்கை அரச அதிகாரிகளை விமர்சனம் செய்பவர்களும் கைது செய்யப்படுவர் என்பதற்கு இலங்கையின் மனித உரிமைகள் ஆணையகம் கடந்த 25ம் திகதி கண்டனத்தை தெரிவித்திருந்தது. அத்துடன் இது அரசியலமைப்புக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில தினங்களாக பேஸ்புக்கில் இடம்பெற்ற பதிவுகளில் கொரோனா பற்றிய பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளது என தெரிவித்து பலரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இது வருத்தத்திற்குரியது என்றும் அரசாங்க செய்திகள் தொடர்பிலும் இவ்வாறான கைதுகள் ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் இது இலங்கையில் வாழும் சிறுபான்மையினரை நோக்கி மேற்கொள்ளப்படக்கூடாது என்பதையும் கோரியுள்ளார். இருப்பினும் பொது மக்களின் சுகாதாரம் தொடர்பில் பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க