இலங்கை

இலங்கையில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு!

தற்போது பரவிவரும் கொரோனா தாக்கத்தினால் நாட்டில் அவ்வப்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அவ்வேளைகளில் இணைய குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை கணணி அவர நடவடிக்கை பிரிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 9 வாரங்களில் 3900 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இவை அனைத்தும் தனியுரிமை மீறல்கள், மோசடிகள், ஹாக்கிங் மற்றும் சமூக ஊடக தொடர்பான முறைப்பாடுகளே என இலங்கை கணணி அவர நடவடிக்கை பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகாஷ்முல்ல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தகவல் அளித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாண்டு இறுதிக்குள் இணைய குற்றங்கள் பாரியளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, இக்கொரோனா கால கட்டத்தை குற்றவாளிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துவது அப்பட்டமாக தெரிகிறது. ஆகவே மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க