உள்நாட்டு செய்திகள்புதியவை

யாழ்ப்பாணம்,வவுனியா, மன்னாரில்  இடம்பெற்ற நிகழ்வுகள்

கடந்த மாதம் 21ம் திததி உயிர்த்தஞாயிறு திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பலியான மக்களுக்கான சர்வமத ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும் நேற்று காலை சாவகச்சேரி நகரத்தில் இடம்பெற்றது.

சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சாவகச்சேரி வீரபத்திரர் ஆலய பிரதம குருக்கள் சாவகச்சேரி லிகோரியார் தேவாலய பங்குத்தந்தை சாவகச்சேரி ஜும்மா பள்ளிவாசல் மௌலவி நாவற்குழி விகாரையின் விகாராதிபதி ஆகியோர் ஒன்றாக மெழுகுவர்த்தி ஏற்றி மலர்அஞ்சலி செலுத்தி சர்வமத பிரார்த்தனைகளை ஆரம்பித்து வைத்தனர்.


0000000000000000000000000000
தேசிய ரீதியில் இடம் பெறவுள்ள இளைஞர் விருது விழாவில் இளைஞர்களின் பங்களிப்பினை அதிகரிக்கும் நோக்கில் நேற்று மன்னரில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கட்டமைப்பு தொடர்பாகவும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நாடளாவிய ரீதியிலான வேலைத் திட்டங்கள் தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அரச தனியார் அதிகாரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தெளிவுபடுத்தும் வகையில் இந்த கருத்தமர்வு இடம்பெற்றது

மன்னார் பிரதேச செயலக மண்டபத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி. பூலோகராஜா தலைமையில் இந்த கருத்தமர்வு இடம் பெற்றது.


00000000000000000
குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்த பொதுமக்களின் ஆத்ம சந்தி வேண்டி நேற்று வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன
ஆலயத்தின் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் இறந்தவர்களின் ஆதம்சாந்தி வேண்டி பூஜைகள் இடம்பெற்றதுடன் ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டிருந்தது.
இதேவேளை அஞ்சலிச்சுடர்கள் ஏற்றப்பட்டதுடன் நெய் தீபம் ஏந்தியும் பிரார்த்தனைகள் இடம்பெற்று மலர் அஞ்சலியும் இடம்பெற்றிருந்தது

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் உயிர்நீத்தவர்களிற்கான ஆத்ம சாந்தி பிரராத்தனை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இடம்பெற்றது.

இலங்கை பொதுஜன போக்குவரத்து சங்கத்தின் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இறந்தவர்களிற்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியும் அவர்களின் ஆத்ம சாந்திக்காக மெழுகுவர்த்தியும் ஏற்றி வைக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க