உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்முக்கிய செய்திகள்

ரிஷாட்டின் தலைவிதி 3 வாரங்களுக்குள் நிர்ணயம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றவாளியென நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஆளுங்கட்சி இன்று தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசின், நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியாலும் , அரசுக்கு எதிராக ஜே.வி.பியாலும் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

இதையடுத்தே அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழு மூன்று வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை கையளிக்கவேண்டும். அதில் ரிஷாட் பதியுதீன் குற்றவாளியென கண்டறியப்பட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

கருத்து தெரிவிக்க