இவ்வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் நாட்டின் சுற்றுலா வருமானம் குறித்து இலங்கை மத்திய வங்கி கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க கடந்த மூன்று மாதங்களில் நாட்டிற்கு வருகை தந்த 722,276 சுற்றுலா பயணிகளால் 1,122.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் இது 2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.4 சதவீத அதிகரிப்பாகுமெனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க