வெளிநாட்டிலிருந்து தனிநபரொருவரிடமிருந்து 3 கோடி 70 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் கடந்த ஏப்ரல் 02ம் திகதி தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்து கொழும்பிலிருந்து வருகை தந்த நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் பாசிக்குடா விடுதியொன்றிலிருந்து கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 03) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்து 3 கோடியே 28 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க