சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் 5000 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதியை 2500 ரூபாய் சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க நிவாரணப் பலன்களை எதிர்பார்த்து புதிதாக அஸ்வெசும திட்டத்திற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த 812,753 விண்ணப்பதாரர்களிடமிருந்து பொருத்தமான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) முதலாம் திகதி முதல் 13ம் திகதி வரை நாடு முழுவதும் அமைந்துள்ள லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பு மற்றும் இலங்கை நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன விற்பனை நிலையங்கள் மூலம் குறித்த பொதிகள் வழங்கிவைக்கப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க