நேற்று (மார்ச் 26) கல்லடி,நாவற்குடா, ஆரையம்பதி, புதிய காத்தான்குடி புதுக்குடியிருப்பு பகுதிகளில் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிடமிருந்து கசிப்பு ,ஐஸ், கேரள கஞ்சா, போதை பொருள், சிகரெட்கள், சகிப்பு தயாரிப்பு உபகரணங்கள்,எரிவாயு சிலிண்டர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க