கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் ஆளுநர் பதவிகளை வகிப்பவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
” 21/4 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு அதிஉச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். அத்துடன், குற்றவாளிகளுக்கு அரசியல் அனுசரணை வழங்கினார்கள் எனக் கூறப்படும் நபர்களுக்கு எதிராகவும் தண்டனை அவசியமாகும்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கூட முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, இம்மூவரையும் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யவேண்டும். அப்போதுதான் சுயாதீன விசாரணைகளை எதிர்பார்க்கமுடியும்.” என்றார்.
கருத்து தெரிவிக்க