நேற்று (ஏப்ரல் 08) வவுனியா பூவரசன்குளம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி லொறியொன்றில் 20 மாடுகளை மல்லாவி பகுதியிலிருந்து குருநாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட முற்பட்ட மூவர் வவுனியா, பூவரசன்குளம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதற்கிணங்க கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 20 மாடுகளும் மாடுகளை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க