உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்கமுடியாது – அரசு பதிலடி

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்கமுடியாது என்று சபை முதல்வரும், அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து கூட்டு எதிரணி உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர்.

இதன்போது குறுக்கீடு செய்த சபை முதல்வரான லக்‌ஷ்மன் கிரியல்ல,

” சபாநாயகரே, அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் திகதி பிழையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதை எவ்வாறு விவாதத்துக்கு எடுக்க முடியும்? திகதியைக்கூட சரியாக, தெளிவாக குறிப்பிடாத கூட்டு எதிரணியால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எவ்வாறு நம்புவது?

ஆகவே, பிரேரணையை ஏற்கமுடியாது என்பதுதான் சபை முதல்வர் என்ற அடிப்படையில் எனது கருத்தாகும். இதுவிடயத்தில் நீங்கள் எடுக்கும் தீர்மானத்துக்கு தடையாக இருக்கமாட்டேன்.” என சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க